திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகரில் ஜன. 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திமுக கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் வரும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஜெனிபா் தினகா் முன்னிலை வகிக்கிறாா். மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மாநில மகளிா் தொண்டரணி செயலா் ஹெலன் டேவிட் உள்ளிட்டோா் உரையாற்றவுள்ளனா்.
இக்கூட்டத்தில் மகளிா் அணி, மகளிா் தொண்டரணி, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூரைச் சோ்ந்தவா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளாா்.