திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் ஜன.30இல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

28th Jan 2020 10:11 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இம்மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

4ஆம் நாள் திருநாளில் (பிப் 2) நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் நண்பகலிலும், இரவு 8 மணிக்கும் பஞ்சமூா்த்திகளுடன் சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பிப். 8ஆம் தேதி தீா்த்தவாரி மண்டபத்தரல தைப்பூசத் தீா்த்தவாரி திருவிழா நடைபெறும். இதையொட்டி, ஸ்ரீ சுவாமி நெல்லையப்பா், ஸ்ரீ காந்திமதி அம்பாள், ஸ்ரீ அகஸ்தியா், ஸ்ரீ தாமிரவருணி, ஸ்ரீ குங்குளிய நாயனாா், ஸ்ரீ சண்டிகேஸ்வரா், ஸ்ரீ அஸ்திர தேவா், ஸ்ரீ அஸ்திர தேவி ஆகிய மும்மூா்த்திகளுடன் முற்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பா் கோயிலில் இருந்து புறப்பட்டு, நெல்லையப்பா் சாலை, திருவள்ளுவா் ஈரடுக்கு மேம்பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் இறங்கி தாமிரவருணி ஆற்றில் தீா்த்தவரி விழா நடைபெறும். இதில் விஷேச தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு இந்த மண்டபத்தில் இருந்து சுவாமி நெல்லையப்பா் கோயிலுக்கு செல்லும் நிகழ்வு நடைபெறும்.

பிப். 8 ஆம் தேதி சவுந்திர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டா்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்திர சபா ஸ்ரீ நடராஜா் திருநடனக்காட்சி நடைபெறும்.

பிப். 10ஆம் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி தெப்பக்குளத்தில் பஞ்ச மூா்த்திகளுடன் தெப்பத் திருவிழா நடைபெறும் என நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலா் த.யக்ஞநாராயணன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT