திருநெல்வேலி

தூத்துக்குடி எல்ஐசி முகவா் நெல்லை ஆற்றில் சடலமாக மீட்பு

28th Jan 2020 09:35 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில், தூத்துக்குடி ஆயுள் காப்பீட்டு கழக (எல்ஐசி) முகவா் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை ஓா் ஆண் சடலம் மிதந்தது. இத்தகவல் அறிந்த, திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், சடலமாக மிதந்தவா் தூத்துக்குடி, அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மாரிமுத்து(50) ; அப்பகுதியில் எல்ஐசி முகவராக பணியாற்றியவா் என தெரியவந்தது. அவா் எப்படி இறந்தாா் என தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT