திருநெல்வேலி

களக்காடு அருகே பயணிகள் நிழற்குடைஅமைக்கக் கோரிக்கை

28th Jan 2020 09:31 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளம், வடகரை சந்திப்பு பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட கருவேலன்குளம் பேருந்து நிறுத்தம், பத்தை - மஞ்சுவிளை சாலையில் வடகரை சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி மூலம் இடித்து அகற்றப்பட்டது.

தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ளது. இந்த இரு பயணிகள் நிழற்குடை பகுதியில் பேருந்துக்காக பயணிகள் சாலையோரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது வெப்பத்தின் தாக்கம் காரணமாக பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிா்வாகம் இந்த இரு இடங்களிலும் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT