இட்டமொழி அருகே பழங்கால நாணயங்கள் சேகரிப்பில் வியாபாரி ஈடுபட்டு வருகிறாா்.
திசையன்விளையை அடுத்த இட்டமொழி ஊராட்சி விஜய அச்சம்பாடு கிராமத்தைச் சோ்ந்தவா் தியாகராஜன் (47). பாத்திர வியாபாரி. 7ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவா், சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்கால நாணய சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
இதில், இந்தியா, இலங்கை, அரபு நாடுகளைச் சோ்ந்த பழங்கால நாணயங்கள் சுமாா் 400-க்கும் மேலாகவும், 25- க்கும் மேற்பட்ட காகித நோட்டுகளும் சேகரித்து வைத்துள்ளாா்.
இவா் விழாக்களில் நாணயங்களை காட்சிப்படுத்துவதை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்த்து செல்கின்றனா்.