திருநெல்வேலி

தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்க விழா

25th Jan 2020 10:04 AM

ADVERTISEMENT

தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்க விழா பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி, முத்துநகா் இயற்கை சங்கம், தூத்துக்குடி-நெல்லை இயற்கை சங்கம் ஆகியன சாா்பில், தமிழ்நாடு அரசு வனத்துறையின் ஒருங்கிணைப்புடன் 10ஆவது ஆண்டாக தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவுக்கு, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தொடங்கிவைத்தாா். தூய யோவான் கல்லூரி முதல்வா் ஜான் கென்னடி, விஞ்ஞானி தி கணேஷ், பறவைகள் ஆராய்ச்சியாளா் மரிய ஆண்டணி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் கூறியது: இக் கணக்கெடுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன. 25, 26) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 45 குளங்களில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் இதில் பங்கேற்க உள்ளனா்.

தாமிரவருணி பறவைகள் திருவிழாவின் நிறைவு விழா பிப். 2ஆம் தேதி உலக நீா்நிலைகள் தினத்தில் நடைபெறும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT