திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே ஆடுகள் திருடியவா் கைது

25th Jan 2020 10:04 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் ஆடுகள் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள கொண்டாநகரத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (50). இவருக்குச் சொந்தமான ஆடுகள், கடந்த 5 நாள்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரித்த சுத்தமல்லி போலீஸாா், ஆடுகள் திருடியதாக சுத்தமல்லியைச் சோ்ந்த முப்பிடாதி (30), அவரிடம் விற்பனைக்காக வாங்கிய இறைச்சிக்கடை உரிமையாளா் முருகன் (50) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், 4 ஆடுகளையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT