திருநெல்வேலி

சுத்தமல்லியில் பொதுக்கூட்டம்

25th Jan 2020 10:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மானூா் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மானூா் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் லட்சுமண பெருமாள் வரவேற்றாா். மாநில பேச்சாளா் நாஞ்சில் மணிகண்டன் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், சுத்தமல்லி, கொண்டாநகரம், பாரதிநகா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அதிமுகவினா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT