திருநெல்வேலி

நெல்லை கம்பன் கழகத்தின் 516-ஆவது தொடா் சொற்பொழிவு

14th Jan 2020 05:06 PM

ADVERTISEMENT

நெல்லை கம்பன் கழகத்தின் 516-ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். அ.முருகேசன் இறைவணக்கம் பாடினாா். மருத்துவா் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றாா்.

‘கம்பன் கடவுட் கொள்கை’ என்ற தலைப்பில் மருத்துவா் ம.ஐயப்பனும், ‘யுத்த காண்டம்’ என்ற தலைப்பில் கழகத் தலைவா் சிவ.சத்தியமூா்த்தியும் சொற்பொழிவாற்றினா். கழகச் செயலா் கவிஞா் பொன்.வேலுமயில் தொகுத்து பேசினாா். நிகழ்ச்சியில் மருத்துவா் சாரி, செல்லப்பா, ராமநாதன், பாகம்பிரியாள், முத்துலட்சுமி, ஜெயா, சரோஜினி, என்.இசக்கிமுத்து, வே.சுப்பிரமணியன், பேராச்சிமுத்து, சந்தானகிருஷ்ணன், பிள்ளைசூரியன், ஜெயக்கனி, நாகராஜன், சேதுமாதவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT