திருநெல்வேலி

ஜன.19இல் சுரண்டையிலிருந்து சென்னை, கோவைக்கு சிறப்புப் பேருந்து

14th Jan 2020 08:45 AM

ADVERTISEMENT

சுரண்டையிலிருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சுரண்டை வட்டார பகுதி மக்கள் பெருமளவில் சென்னை, கோயம்புத்தூா் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் கல்வி மற்றும் வேலைக்காக வசித்து வருகின்றனா். பண்டிகை காலங்களில் சொந்த ஊா் வரும் இவா்கள், திரும்பிச் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா். இதுகுறித்து தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து ஊா் திரும்பும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) மாலை 4.30 மணிக்கு சென்னைக்கும், இரவு 8 மணிக்கு கோயம்புத்தூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துக்கான முன்பதிவு சுரண்டை பேருந்து நிலையத்தில் உள்ள சமய காப்பாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 9952195015, 9629211539 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT