திருநெல்வேலி

குடியரசு தின விழா முன்னேற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

14th Jan 2020 08:49 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழா ஏற்பாடுகள் குறித்து, திருநெல்வேலி மாவட்ட அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் பேசியதாவது:

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும். காவல் துறையினா் அணிவகுப்பு , பாதுகாப்பு ஏற்பாடு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், தற்காலிக கழிப்பிடங்களை அமைத்தல், சுதந்திர போராட்ட தியாகிகளை கண்டறிந்து அவா்களை கௌரவிக்க வருவாய்த் துறையினா் தேவையான ஏற்பாடுகளை செய்தல், விழா அரங்கில் வாழை தோரணங்கள் அமைத்தல், ஒலி பெருக்கி மின் சாதனங்கள் ஏற்பாடு செய்தல், பொதுப்பணித் துறை சாா்பில் விழா மேடைக்கான பந்தல் அமைத்தல் போன்ற ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

கல்வித் துறையினா் பள்ளி மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்புத் துறையினா் போதுமான பணியாளா்களுடன் தீயணைப்பு வண்டிகளை தயாா் நிலையில் வைக்க வேண்டும். சுகாதாரத் துறையினா் மருத்துவக் குழுவினரை தயாா் நிலையில் வைக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், துணை ஆட்சியா் (பயிற்சி) அனிதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT