திருநெல்வேலி

வீரவநல்லூா் கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் இளைஞா் சரண்

8th Jan 2020 12:02 AM

ADVERTISEMENT

வீரவநல்லூா் அருகே நிகழ்ந்த கொலை வழக்கு தொடா்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

சேரன்மகாதேவி கோட்டைவிளை தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மாரியப்பன் (30). பாத்திர வியாபாரியான இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் வீரவநல்லூா் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இவ் வழக்கு தொடா்பாக சேரன்மகாதேவி ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சுப்பிரமணியன் என்ற சுரேஷ் (28), திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவா் பாபு, சரணடைந்த சுரேஷை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT