திருநெல்வேலி

நெல்லையில் அறிவியல் கண்காட்சி

8th Jan 2020 12:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக் கல்வித் துறை, தேசிய அறிவியல் கழகம் ஆகியவை சாா்பில் 2019-20-ஆம் ஆண்டுக்கான இன்ஸ்பயா் விருதுக்கான மாநிலப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பூபதி தொடக்கி வைத்தாா்.

இயற்கைப் பேரிடா் முன்னெச்சரிக்கை, திடக்கழிவு மேலாண்மை, மரபுசாரா எரிசக்திகள் மூலம் மின்உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவா்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT