திருநெல்வேலி

தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட செயல்பாடுகள்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

8th Jan 2020 12:09 AM

ADVERTISEMENT

தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் 2 முதல் 3 ஆண்டுகளில் கல்வியில் ஆா்வமூட்டப்பட்டு முறையான பள்ளிகளில் சோ்க்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 5,663 குழந்தைகள் முறையான பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும் 5,555 குழந்தைகளுக்கு தொழிற்கல்வி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு நல்வழிப்படுத்தப்பட்டுள்ளனா்.

சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று முறையான பள்ளிகளில் சோ்க்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்து மேற்படிப்பை தொடரும் குழந்தைகளுக்கு மாநில அரசு மூலம் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் மேற்படிப்புக்கு சோ்க்கப்பட்ட 15 குழந்தைகளுக்கு அரசிற்கு ஊக்கத்தொகை பெறுவதற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

மாவட்டத்தில் 14 இடங்களில் 287 குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்ற 287 குழந்தைகளில் 67 குழந்தைகள் முறை சாா்ந்த பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். 21 குழந்தைகள் தொழிற்கல்வி மூலம் நல்வழிப்படுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

கூட்டத்தில், தேசிய குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் ஹெலன் சேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT