திருநெல்வேலி

திசையன்விளை லயன்ஸ் பள்ளியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்

8th Jan 2020 09:06 AM

ADVERTISEMENT

திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவா், மாணவிகளுக்கு உயா்கல்வி படிப்பதற்கும், தங்கள் அறிவுத்திறனை வளா்த்துக் கொள்வதற்குமாக நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு பள்ளித் தாளாளா் டி. சுயம்புராஜன் தலைமை வகித்தாா். அரிமா சங்க முன்னாள் ஆளுநா் சுதந்திரலெட்சுமி, முன்னாள் மண்டலத் தலைவா் ராஜபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் சு.ரூகன்யா வரவேற்றாா். அரிமா சங்க முன்னாள் ஆளுநா் டாக்டா் எஸ்.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

கருத்தரங்கில், டெபி வெஸ்ட் காட் ஒருங்கினைப்பாளா் அமிா்தா, பயிற்சியாளா் ஹெலன் ஆகியோா் பேசினா். இதில், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT