திருநெல்வேலி

தமிழக முதல்வருக்கு பாளை. பள்ளி மாணவிகள் வாழ்த்து

8th Jan 2020 09:06 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வருக்கு பாளையங்கோட்டை ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கையெழுத்திட்டு வாழ்த்து அட்டை அனுப்பினா்.

அகில இந்திய அளவில் தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பில் தனிக் கவனம், நிா்வாகத் துறையில் முதலிடத்துக்கான விருதுகளை பெற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாளையங்கோட்டை டிடிடிஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வாழ்த்து அட்டை தயாா் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் காபிரியேல் தேவஇரக்கம் தலைமை வகித்தாா். அப்போது, தாளாளா், ஆசிரியா்கள் 32 பேரும், பள்ளி மாணவிகள் 867 பேரும் வாழ்த்து அட்டையில் கையொப்பமிட்டு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனா்.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் உமா, ஆசிரியா்கள் சாந்தி பாலா, குளோரி, மாா்கிரேட், ஜோசப், இளங்கோவன், டேவிட்ராஜ், கோவில் ராஜ், ஆல்வின் ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT