குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து மேலப்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற 6 ஆயிரம் போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேலப்பாளையத்தில், அரசியல் கட்சியினா், ஜமாத் அமைப்பினா் சாா்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு ஆதரவாக மேலப்பாளையத்தில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில் இப்பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ாக, மேலப்பாளையம் காவல் ஆய்வாளா் பா்ணபாஸ் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் பேரணியில் பங்கேற்ற 2,500 பெண்கள் உள்பட 6 ஆயிரம் போ் மீது 3 பிரிவுகளில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.