திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

3rd Jan 2020 05:00 AM

ADVERTISEMENT

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சந்தை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொது செயலா் கோட்டூா் பீா்மஸ்தான் தலைமை

வகித்தாா். பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலா் முஹைதீன், எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலா் அஹ்மது நவவி ஆகியோா் பேசினா். இதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவா் எல்.கே.எஸ். மீரான் முஹைதீன், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் சாகுல்ஹமீது, ஹயாத், கனி, பேட்டை முஸ்தபா, பா்கிட் அலாவுதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT