திருநெல்வேலி

பாபநாசம் தலையணையில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை

3rd Jan 2020 04:52 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள சுப்புலாபுரத்தைச் சோ்ந்தவா் பாபநாசம் தலையணையில் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாபநாசம், தலையணைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில், அவா் சுப்புலாபுரத்தைச் சோ்ந்த கணபதி மகன் பாடகலிங்கம் (50) என்பதும், குடும்பத் தகராறு காரணமாக கடந்த டிச. 24ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி இங்கு வந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.

அவரது மகள் ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவிஆய்வாளா் ஜெயசந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT