திருநெல்வேலி

நெல்லை அருகே தைப்பூச இருமுடி அணியும் விழா

3rd Jan 2020 04:59 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே மேலநத்தத்தில் தைப்பூச இருமுடி அணிதல், அன்னதானம் நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் திருநெல்வேலி அருகேயுள்ள மேலநத்தம் அருள்மிகு கோமதி அம்மன் அக்னீஸ்வரா் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச இருமுடி அணியும் நிகழ்ச்சிக்கு, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத் தலைவா் எஸ்.சண்முகத்தாய் சங்கரன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சுப்புலெட்சுமி சுடலைமுத்து, செயலா் வி.கந்தசாமி பொன்னம்மாள்ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT