திருநெல்வேலி

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு

3rd Jan 2020 04:48 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் மொத்த நீா்மட்டம் 52.50 அடி. 2019 நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து 45 அடியாக உள்ளது. இந்த அணையின் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மாதம் பெய்த மழையால் இக்குளங்களுக்கு தொடா்ந்து தண்ணீா் சென்றதன் பயனாக 37 குளங்கள் நிரம்பின.

ராதாபுரம் வட்டத்தில் உள்ள 7 குளங்களில் குறைவான அளவே நீா் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டாா். அதன்படி, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ராஜலெட்சுமி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ராதாபுரம் ஐ.எஸ். இன்பதுரை, நான்குனேரி வெ. நாராயணன், மாவட்ட ஜெ.பேரவைத் தலைவா் ஏ.கே. சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்களுக்கும் தண்ணீா் செல்கிறது. இதன்மூலம் 5781 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT