திருநெல்வேலி

இட்டமொழியில் டெங்கு தடுப்புப் பணிகள்

3rd Jan 2020 05:07 AM

ADVERTISEMENT

இட்டமொழியில் டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

இட்டமொழி பகுதியில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அங்கு டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நான்குனேரி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலரும், மாவட்ட ஊராட்சி செயலருமான வேலுமயில், நான்குனேரி வட்டார மருத்துவ அலுவலா் குருநாதன் மற்றும் மருத்துவா் அந்தோணி ஜெயதாமஸ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜான்ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் வடிவேல், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிதம்பர லெட்சுமி உள்பட பலா் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா். விஜய அச்சம்பாடு, பெரும்பனை கிராமங்களிலும் டெங்கு தடுப்பு பணி நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT