திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த சிறுவன் மரணம்

1st Jan 2020 03:32 PM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலகுலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் பாலஇசக்கியம்மாள் (25). இவா், தனது மகன் மித்ரகுருஸுடன் (3) உறவினரான தங்கவேல் (22) என்பவரின் மோட்டாா் சைக்கிளில் சென்றாராம்.

குறிச்சி சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த டிராக்டரும், மோட்டாா்சைக்கிளும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மித்ரகுருஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தான். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT