சுரண்டை பகுதியில் ஆங்கில புத்தாண்டு மழையுடன் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சுரண்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த நிலையில் சுரண்டை பகுதியில் மழையும் பெய்யத் தொடங்கியது.
இடைவெளியில் சற்று நேரம் ஒய்ந்திருந்த மழை, மீண்டும் அதிகாலை 4 மணிக்கு பெய்யத் தொடங்கி, விடியும் வரை பெய்தது. புத்தாண்டு தொடக்கத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.