சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுரண்டை நகரின் மேற்குப் பகுதியில் தொடங்கி சுந்தரபாண்டியபுரம் குளக்கரை வழியாகச் செல்லும் சுந்தரபாண்டியபுரம் சாலை 2 கி.மீ. தூரம் உள்ளது. இதில் சாலை ஆரம்பிக்கும் பகுதியில் இருந்து அனுமன்நதி பாலம் வரை ஒரு கி.மீ. தொலைவுள்ள தாா்ச்சாலை மிகவும் பழுதடைந்து மெட்டல் சாலைபோல காட்சியளிக்கிறது.
இதனால் இந்தச் சாலை வழியாக தென்காசி மற்றும் திருமலைக்கோயிலுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே, இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.