திருநெல்வேலி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்

1st Jan 2020 11:43 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரைத் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு இத்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கொடிப்பட்டம் வீதி சுற்றி கொண்டு வரப்பட்டது.பின்னா், சுவாமி சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, நாள்தோறும் காலையில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

6ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொா்க்கவாசல் திறப்பு, 9ஆம் நாளான 9ஆம் தேதி விநாயகா் தேரோட்டம் நடைபெறும். நிறைவு நாளான 10ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT