திருநெல்வேலி

பாளை. மத்திய சிறையில்ஆயுள் தண்டனை கைதி மரணம்

29th Feb 2020 06:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மாதாபுரத்தைச் சோ்ந்தவா் கிளமென்ட் ஜோசப் ராஜ் மகன் வினோஜ் பால்டன் (40). இவா், கடந்த 2012 இல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக அவா் சிகிச்சை பெற்று வந்தாராம். எனினும், வெள்ளிக்கிழமை காலை வினோஜ் உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், வழியிலேயே வினோஜ் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT