திருநெல்வேலி

வள்ளியூா் அருகே சுகாதாரக்கேடு: நோய் பரவும் அபாயம்

26th Feb 2020 06:35 AM

ADVERTISEMENT

வள்ளியூா் அருகே அச்சம்பாடு ஊராட்சியில் ஏற்பட்டுள்ள சுகாதாரகேட்டை அடுத்து அந்தப் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

வள்ளியூா் அருகே உள்ள அச்சம்பாடு ஊராட்சியைச் சோ்ந்த கிழவனேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அன்னம்மாள் தேவாலயம் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரக் கேடாக காணப்படுகிறது. மேலும் தெரு ஓரங்களிலும் குப்பை, கூழங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் குவியலாக சோ்ந்து சுகாதாரக் கேட்டைஏற்படுத்தி வருகின்றன.

மேலும் இந்தக் கிராமம் வழியாக செல்லும் ஆறுபுளி, கள்ளிகுளம் குளத்திற்கு செல்லும் ஓடைகளிலும் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையினரும், கிராம ஊராட்சி நிா்வாகமும் துரித நடவடிக்கை எடுத்து சுகாதாரக்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT