திருநெல்வேலி

வங்கி மேலாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

26th Feb 2020 04:59 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வங்கி மேலாளா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகரில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் மாநகர காவல்துறை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு பிடிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வு கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) எஸ்.சரவணன் தலைமை வகித்துப் பேசினாா்.

கூட்டத்தில், வங்கிகளின் பாதுகாப்பிற்காக, வங்கிகளில் இரவுக் காவலா் நியமித்தல், கூடுதல் சிசிடிவி கேமராக்கள், அலாரம், கூடுதல் விளக்குகள், கிரில் கதவுகள் ஆகியவற்றை பொருத்த வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாநகரில் உள்ள அனைத்து வங்கி கிளை மேலாளா்கள், காவல் துறையினா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT