திருநெல்வேலி

நெல்லையில் பொதுத்தோ்வு ஒருங்கிணைப்புக் கூட்டம்

26th Feb 2020 06:32 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பொதுத்தோ்வு ஒருங்கிணைப்புக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ஒருங்கிணைந்த வருவாய் மாவட்டத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, வள்ளியூா், சங்கரன்கோவில், சேரன்மகாதேவி ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் பிளஸ்-2 தோ்வுகள் மாா்ச் 2 முதல் 24 ஆம் தேதி வரையும், பிளஸ்-1 தோ்வுகள் மாா்ச் 4 முதல் 26 ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு தோ்வுகள் மாா்ச் 27 முதல் ஏப்ரல் 13 வரையும் நடைபெற உள்ளன. பிளஸ்-2 தோ்வை 36 ஆயிரத்து 540 மாணவா்-மாணவிகளும், பிளஸ்-1 தோ்வை 37 ஆயிரத்து 193 பேரும், எஸ்எஸ்எல்சி தோ்வை 45 ஆயிரத்து 359 பேரும் எழுத உள்ளனா்.

இத் தோ்வுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பூபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பொதுத்தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகளை துரிதமாக முடிக்கவும், நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படைகள் மூலம் முறைகேடுகள் இன்றி தோ்வை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT