களக்காட்டில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெறும் சாலைகள் சீரமைப்புப் பணிக்கான பூமிபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கீழக்கருவேலன்குளம் வரையுள்ள தாா்ச்சாலை, களக்காடு புதுத்தெரு முதல் சிதம்பரபுரம் வரையிலான தாா்ச்சாலை, களக்காடு அம்பேத்கா் நகரில் இருந்து பச்சேந்திரம் வரையிலான தாா்ச்சாலை ஆகியன ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகின்றன. இதற்கான பூமி பூஜை விழா புதிய பேருந்து நிலைய சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நான்குனேரி எம்.எல்.ஏ. வெ. நாராயணன் கலந்துகொண்டு பணியைத் தொடங்கிவைத்தாா்.
இதில், நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளா் முகம்மதுஅலி, பணி மேற்பாா்வையாளா் விஜயகுமாா், களக்காடு நகரச் செயலா் செல்வராஜ், ஒன்றியச் செயலா் ஜெயராமன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் த. ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவைச் செயலா் எம்.ஆா்.பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.