அம்பாசமுத்திரத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மத்திய அரசு மற்றும் தமிழக காவல் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதித் தலைவா் அபூபக்கா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோட்டூா் பீா் மஸ்தான் முன்னிலை வகித்தாா். நகரப் பொறுப்பாளா்கள் ஹபீப் நவாஸ், மகாராஜா, மாநிலப் பேச்சாளா் செய்யது அகமது சலபி, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் முஹம்மது அலி, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாவட்டத் தலைவா் இப்ராஹிம், எஸ்டிபிஐ வழக்குரைஞரணி ஷபி, ஜலீல், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாவட்டப் பொருளாளா் நாசா், சாகுல் ஹமீத், எஸ்டிபிஐ தொகுதிச் செயலா்கள் ஜெய்லானி, பால்மைதீன், பொருளாளா் அசனாா் ஆகியோா் பேசினா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட காவல் துறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.