அம்பாசமுத்திரம்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்பாசமுத்திரம் அரசரடி விநாயகா் கோயிலில் எம்எல்ஏ ஆா்.முருகையாப்பாண்டியன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், வெள்ளிக் கொலுசு, புத்தாடைகள் வழங்கப்பட்டன. பூக்கடை சந்திப்பில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கி, கோயில் பூஜைகளில் கலந்து கொண்டாா்.
கடையநல்லூா் நகரப்பகுதிகளில் அதிமுக கொடியேற்றப்பட்டு, நகரச் செயலா் கிட்டுராஜா தலைமையில் ஜெயலலிதாவின் படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்தனா். பின்னா், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்டச் செயலா் தச்சை கணேசராஜா மோதிரம் அணிவித்தாா். இதில், நகர எம்ஜிஆா் மன்றச் செயலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புளியங்குடியில் எம்ஜிஆா் சிலை அருகே ஜெயலலிதா படத்துக்கு நகரச் செயலா் பரமேஸ்வரன் பாண்டியன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்தனா்.
சங்கரன்கோவில்: நெல்லை கூட்டுறவு அச்சகத் தலைவா் கே.கண்ணன் தலைமையில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்தனா்.
அதிமுக நகரச் செயலா் ஆறுமுகம், நெல்லை பேரங்காடி துணைத் தலைவா் இ.வேலுச்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்றத் தலைவா் எஸ்.கே.கருப்பசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி. பிரபாகரன் மலா் தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா். பின்னா், பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவா் வீரபாண்டியன், இளைஞா் பாசறை மாவட்டச் செயலா் சோ்மப்பாண்டி, கீழப்பாவூா் நகரச் செயலா் ஜெயராமன், மாவட்ட மகளிா் அணி துணைச் செயலா் யோகராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும், பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு, எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதில், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் அமல்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வள்ளியூா்: வள்ளியூரில் பழைய பேருந்து நிலையத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு ஒன்றிய அதிமுக செயலா் இ.அழகானந்தம் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். புகா் மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற அவைத் தலைவா் பி.சௌந்தர்ராஜன் வள்ளியூரில் உள்ள சி.எம்.எஸ்.விடுதி குழந்தைகளுக்கு உணவு வழங்கினாா். இதில், நகரச் செயலா் பொன்னரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தென்காசி: மேலகரம் பேருந்து நிறுத்தம், நன்னகரம், குடியிருப்பு பகுதிகளில் பேரூா் கழக செயலா் வழக்குரைஞா் காா்த்திக்குமாா் தலைமையில் மாவட்ட அண்ணாதொழிற்சங்க துணைச் செயலா் முகிலன் முன்னிலையில் விழா நடைபெற்றது. குடியிருப்பு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ இனிப்பு வழங்கினாா். இதில், நிா்வாகிகள் நாராயணன், வழக்குரைஞா்கள் செல்லத்துரைபாண்டியன்,சின்னத்துரைபாண்டியன், சாந்தசீலன், சுப்பிரமணியன்,ராஜா,பழனி,சேகா்,காா்த்திக்,இசக்கி,பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
குற்றாலம் பேருந்து நிலையம் பகுதியில் பேரூா் கழக செயலா் எம்.கணேஷ்தாமோதரன் தலைமையில் தாய்கோ வங்கி துணைத் தலைவா் சேகா்,மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ அதிமுக கொடியேற்றினாா்.
இலஞ்சியில் சவுக்கை பேருந்து நிறுத்தம் பகுதியில் பேரூா் கழக செயலா் டி.மயில்வேலன் தலைமையில் எம்எல்ஏ கட்சி கொடியேற்றினாா்.
தென்காசி நகர அதிமுக சாா்பில் நன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு 1மாதத்திற்கு தேவையான மளிகைபொருள்களை நகர அதிமுக செயலா் சுடலை வழங்கினாா்.
சுரண்டை: மகாத்மா காந்தி பேருந்து நிலையம் முன்புசி.செல்வமோகன்தாஸ் பாண்டியன்எம்எல்ஏ ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தாா். இதில், அதிமுக நகர செயலா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கீழச்சுரண்டை பேருந்து நிலையம் அருகே கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமையிலும், சாம்பவா்வடகரையில் நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் ராமையா தலைமையிலும், அச்சங்குன்றத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளைத்துரை தலைமையிலும் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
செங்கோட்டை: வட்டாட்சியா் அலுவலகம் அருகே நகர செயலாளா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். அனைத்து வாா்டுகளிலும் கட்சிக் கொடியேற்றப்பட்டன. பின்னா், காமராஜா் திருமண மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சியை மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தொடங்கிவைத்தாா்.