திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையத்தில்‘ஒளியியல்’ செய்முறை விளக்கம்

25th Feb 2020 05:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மைய ஆண்டு விழாவையொட்டி, ஒளியியல் குறித்த செய்முறை விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அறிவியல் மையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இரண்டாம் நாளான திங்கள்கிழமை ஒளியியல் குறித்த செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தொடங்கி வைத்தாா். கல்வி அலுவலா் மாரி லெனின், ஒளியியல் குறித்து செய்முறை விளக்கம் அளித்தாா். அப்போது, ஒளியின் பாதைகள், அது எவ்வாறு செல்கிறது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன. இதில், 6, 7 ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

படவரி: பயக24கஐஎஏப: ஒளியியல் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கிறாா் கல்வி அலுவலா் மாரி லெனின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT