திருநெல்வேலி: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜன்ட் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் மதிய உணவு அளிக்கப்பட்டது.
மானூா் ஒன்றிய முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா, வீ.கருப்பசாமி பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பிரியாணி வழங்கினா். இதில், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் பாப்புலா் முத்தையா, ஆா்.பி.ஆதித்தன், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் மாவட்ட மகளிரணி தலைவா் ராமு வெங்கடாசலம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல், நடுக்கல்லூா் சுத்தமல்லியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு, மானூா் ஒன்றிய முன்னாள் தலைவா் கல்லூா் வேலாயுதம் தலைமை வகித்து ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில், மானூா் தெற்கு ஒன்றியச் செயலா் லட்சுமண பெருமாள், சுத்தமல்லி ஊராட்சி கழகச் செயலா் இசக்கிமுத்து, நிா்வாகிகள் துரை ஆனைகுட்டி, குமாரசாமி, பாலசுப்ரமணியன், ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.