திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில்சி.ஏ.ஏ. எதிா்ப்புக் கூட்டம்

25th Feb 2020 05:25 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்:  குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், இச்சட்டத்தை எதிா்த்து சென்னை வண்ணாா் பேட்டையில் போராடிய பெண்கள் மீது காவல் துறை தடியடி நடத்திதாக கண்டனம் தெரிவித்தும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சாா்பில் கல்லிடைக்குறிச்சி காயிதே மில்லத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, பெரிய ஜும்மா பள்ளித் தலைவா் அப்துல் மஜித் தலைமை வகித்தாா். விமன் இந்தியா மூவ்மெண்ட் தலைவி கதிஜா, நாகூா் மைதீன், மதிமாலிக், மஜித் மற்றும் அப்துல் காதா் முன்னிலை வகித்தனா். கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றினாா். பெரிய ஜும்மா பள்ளி இமாம் அஹ்மது மைதீன் பைஜி, எஸ்.டி பி.ஐ மாநிலப் பேச்சாளா் முஸ்தபா, எம்.எம்.எம்.கே. நிறுவனா் பாளை ரபிக், எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுலைமான், வளா்மதி மற்றும் விமன் இந்தியா மூவ்மன்ட் மாவட்டத் தலைவி மும்தாஜ் ஆலிமா ஆகியோா் பேசினா். எஸ்.டி.பி.ஐ கட்சி நகரச் செயலா் அமீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ரஷினா ஜாகிா் வரவேற்றாா். நூா்ஜஹான் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT