திருநெல்வேலி

கடையத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

25th Feb 2020 05:24 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: கடையத்தில் பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடையம் கல்யாணி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சுசிலா குமாா், ஒன்றியச் செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாா்ச் 1இல் தென்காசியில் நடைபெற உள்ள குடியுரிமைச் சட்ட ஆதரவுப் பேரணிக்கு கடையம் ஒன்றியத்திலிருந்து 40 வாகனங்களில் செல்வது, குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பொட்டல்புதூரில் பொதுக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாடசாமி, சரவணன், முருகேசன், சுரேஷ், சிவமணிகண்டன், சித்தாா்த், தமிழ்செல்வன், ராஜ், மாரியப்பன், ஒன்றிய மகளிரணித் தலைவி சந்திரா, மணிமேகலை, சந்திரமதி, கல்யாணசுந்தரம், மணி, பலவேசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கடையம் ஒன்றியப் பொதுச் செயலா் ரத்தினகுமாா் வரவேற்றாா். ஆழ்வாா்குறிச்சி நகரத் தலைவா் முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT