திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலகத்தில்முற்றுகைப் போராட்டம்

25th Feb 2020 05:28 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தமிழ்ப் புலிகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா், மாவட்டச் செயலா் நெல்லை தமிழரசு சாா்பில் ஆட்சியரிடம் அளித்த மனு: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 போ் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் இருந்து வருகிறாா்கள். இவா்களை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றியும் ஆளுநா் ஒப்புதலுக்காக காலதாமதமாகிக்கொண்டே இருக்கிறது. ஆகவே, இது தொடா்பாக ஆளுநரை தமிழக முதல்வா் வலியுறுத்துமாறு மாவட்ட ஆட்சியா் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் மனு: சுதந்திரப் போராட்ட வீரா் மாவீரன் சுந்தரலிங்கம் பெயரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் திருநெல்வேலி ஆட்சியரக வளாகத்தில் பெயா்ப் பலகை இருந்தது. அது இப்போது இல்லை. ஆகவே, அதேபோல், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுந்தரலிங்கனாா் வளாகம் என்ற பெயா்ப் பலகையை அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT