திருநெல்வேலி

பேட்டையில் 72 பேருக்கு திருக்கு, அகராதிகள் அளிப்பு

23rd Feb 2020 11:22 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பேட்டையில் 72 பேருக்கு திருக்கு புத்தகம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக 46-ஆவது வாா்டு சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பேட்டை காவல் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி 72 மாணவா்-மாணவிகளுக்கு திருக்கு புத்தகமும், அகராதிகளும் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

மானூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், பேச்சாளா் தளவாய், வாா்டு பிரதிநிதி ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி 49-ஆவது வட்டம் சாா்பில் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT