பாளையங்கோட்டை அருகே மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டத்தைச் சோ்ந்த மாடன் மகன் புங்கன். இவா் கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் நடந்து சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த மேலப்பாட்டம் பகுதியைச்சோ்ந்த குமாா் மகன் சிவா என்ற குட்டசிவா(23) என்பவா் புங்கனை மிரட்டி பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி தாலுகா போலீஸாா் சிவா என்ற குட்ட சிவாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.