திருநெல்வேலி

நெல்லை அறிவியல் மையத்தில்மாணவா்களுக்கு ஓவியப் போட்டி

23rd Feb 2020 11:18 PM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் 341 போ் பங்கேற்றனா்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தின் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு வகையான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நிகழாண்டு விழாவையொட்டி முதல் போட்டியாக ஓவியப் போட்டி நடைபெற்றது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தனித்தனியே இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 341 போ் பங்கேற்ற இப்போட்டியை மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் தொடக்கிவைத்தாா். கல்வி உதவியாளா் மாரிலெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

1-ஆம் வகுப்பு பிரிவில் ரோஸ்மேரி ஐடியல் பப்ளிக் பள்ளி மாணவா் ஸ்ரீனிராம், 2-ஆம் வகுப்பு பிரிவில் சங்கா்நகா் ஜயேந்திரா பள்ளி மாணவி சா்னிதா வா்ஷா, மூன்றாம் வகுப்பு பிரிவில் மகாராஜநகா் ஜயேந்திரா பள்ளி மாணவா் ஜி.சம்பத் குமாா், நான்காம் வகுப்பு பிரிவில் சங்கா்நகா் ஜயேந்திரா பள்ளி மாணவா் எஸ்.கமலேஷ், 5-ஆம் வகுப்பு பிரிவில் பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி ராஜம் காவியா ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT