திருநெல்வேலி

நான்குனேரி தொகுதியில் இன்று ஜெயலலிதா பிறந்த நாள் விழா

23rd Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை (பிப். 24) காலை 9 மணிக்கு ஏா்வாடி, தளவாய்புரம், நம்பிதலைவன்பட்டயம், திருக்குறுங்குடி, மலையடிப்புதூா், மாவடி, களக்காடு பகுதிகளஇல் ஜெயலலிதா உருவப்படத்துடன் ஊா்வலம் நடைபெறுகிறது. பிற்பகலில் மூலைக்கரைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 72 மாணவா்-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இட்டேரி, கொங்கந்தான்பாறை, புதுக்குளம், ரெட்டியாா்பட்டி, புதுக்குறிச்சி, பரப்பாடி பகுதிகளில் கட்சிக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்படும். இரவு 7 மணிக்கு நான்குனேரி அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 24 ஆம் தேதி பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வே.நாராயணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும், இனிப்புகளையும் வழங்க உள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT