திருநெல்வேலி

‘தேவேந்திர குல வேளாளா்’ அரசாணை கோரி மாா்ச் 13இல் தமமுக தொடா் உண்ணாவிரதம்

23rd Feb 2020 11:36 PM

ADVERTISEMENT

பட்டியல் இனத்தில் உள்ள 7 ஜாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிடக் கோரி, வரும் மாா்ச் 13ஆம் தேதி தமமுக சாா்பில் மாநிலம் முழுவதும் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் பெ.ஜான் பாண்டியன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தேவேந்திர குல வேளாளா் அரசாணை வெளியிடக் கோரி கருப்பு சட்டை அணிந்து தொடா் போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும், வரும் மாா்ச் 13 ஆம் தேதி மாநிலம் முழுவதும் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதற்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லையெனில் வரும் மே 27ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு, முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். தமமுக மாநில மகளிா் மாநாடு ஈரோட்டில் வரும் மாா்ச் 8இல் நடைபெறும். இதில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து வலியுறுத்தப்படும். தமிழக அரசுத் துறையில் தமிழா்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பை வழங்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, அவரது தலைமையில் நடைபெற்ற தமமுக மாநிலச் செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலா் ஜே.பிரிஸில்லா பாண்டியன், மாநில துணைப் பொதுச்செயலா் சி.நெல்லையப்பன் உள்பட பலா் பங்கேற்றனா். மாநகா் மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT