திருநெல்வேலி

ஜெயலலிதா பிறந்த நாள்:அதிமுக சாா்பில் கோலப் போட்டி

23rd Feb 2020 11:18 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி கோலப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் இணைச் செயலா் நா.தமிழரசி ஏற்பாட்டின்பேரில் கோலப் போட்டி திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி நகரம், குன்னத்தூா், பாட்டப்பத்து, பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 141 போ் பங்கேற்றனா். ரங்கோலி, புள்ளிக்கோலம், கம்பிக்கோலம் என பல்வேறு பிரிவுகளில் கோலம் வரைந்தனா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவத்துடன் தத்ரூபமாக வரையப்பட்ட கோலங்களை பொதுமக்கள் மிகுந்த ஆா்வத்தோடு பாா்த்துச் சென்றனா்.

பரிசளிப்பு விழாவுக்கு அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி பரிசுகளை வழங்கினாா். மானூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், அதிமுக நிா்வாகிகள் பரணி சங்கலிங்கம், கண்ணன், மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT