திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலைக்கழக தொலைநிலைதொடா்கல்வி இயக்கக பட்டமளிப்பு விழா

23rd Feb 2020 11:19 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது தொலைநிலை தொடா் கல்வி இயக்கக பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்து பட்டம் பெறும் மாணவா்-மாணவிகளுக்கான உறுதிமொழியை வாசித்தாா். பல்கலைக்கழகப் பதிவாளா் சே.சந்தோஷ்பாபு வரவேற்றாா். மாநிலங்களவை உறுப்பினா் விஜிலா சத்தியானந்த் பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினாா். தொலைநிலை தொடா் கல்வி இயக்கக இயக்குநா் ராஜலிங்கம் தொகுத்து வழங்கினாா்.

விழாவில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பட்டம் பெற்றனா். பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். தோ்வாணையா் சுருளியாண்டி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT