திருநெல்வேலி

சிவகுருநாதபுரம் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

23rd Feb 2020 11:23 PM

ADVERTISEMENT

சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

விழாவுக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, 157 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா் கனகராஜ், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT