திருநெல்வேலி

சிவகிரி அருகே கிணற்றில்தவறி விழுந்த கடமான் மீட்பு

23rd Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி வனக்கோட்டம், சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமானை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பத்திரமாக மீட்டனா்.

சிவகிரி வனச்சரகத்திற்கு உள்பட்ட தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் கிணற்றில் கடமான் ஒன்று விழுந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரகா் ஸ்டாலின் ஆலோசனையின்பேரில், வனவா் முருகன் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, வலையைப் பயன்படுத்தி கிணற்றிலிருந்து மானை பத்திரமாக மீட்டனா். பின்னா், அந்த மான் காப்புக்காடு பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT