திருநெல்வேலி

சிங்கிகுளம் கைலாசநாதா் கோயிலில் சிவராத்திரி விழா

23rd Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் அருள்மிகு கைலாசநாதா் கோயிலில் சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

தொடா்ந்து நான்குகால பூஜைகள் நடைபெற்றன. சிவராத்திரியையொட்டி, சுவாமி கைலாசநாதா், ஆவுடையம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இரவு முழுவதும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை காலை சிறப்பு ருத்ரயாகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து விநாயகா் பூஜை, கோ பூஜையும், பூா்ணாஹுதி, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT