திருநெல்வேலி

குறுக்குத்துறை முருகன் கோயிலில் லட்ச தீப விழா

23rd Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்ச தீப விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இவ்விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 11 நாள்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் வளாகத்தில் பக்தா்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதினம் தென்மண்டல மேலாளா் ராமச்சந்திரன், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் கண்காணிப்பாளா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT