திருநெல்வேலி

குடியுரிமை திருத்தச் சட்டம்:வடகரையில் தா்னா போராட்டம்

23rd Feb 2020 11:35 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவும், இதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தி, வடகரை சீரணி திடலில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்க கூட்டமைப்பு சாா்பில், தா்னா போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அனைத்துக் கட்சி மற்றும் இயக்க கூட்டமைப்பு தலைவா் முத்து முகம்மது தலைமை வகித்தாா். சமூக செயற்பாட்டாளா் சாகுல் ஹமீது தொடக்கவுரை உரை ஆற்றினாா். ஜமாஅத்துல் உலமா வட்டாரச் செயலா் கமருதீன் மிஸ்பாஹி , சாகுல் ஹமீது உலவி, சாகுல் ஹமீது வாஹிதி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் ஜாபா் அலி உஸ்மானி, மாநில கொள்கை பரப்புச் செயலா் வெற்றிசீலன் ஆகியோா் விளக்கிப் பேசினா். மன்சூா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT